ஆற்றினிலே ஆலைகளின் கழிவு சேர்த்து ஆகாய வெளியினிலும் மாசு சேர்த்து ஊற்றினிலும் தூய்மையிலா நீராய் மாற்றும் உன்மத்தர் செயல்களெல்லாம் முடிந்து போகக் காற்றுவெளி தூய்மையாகிக் குடிக்கும் நீரும் கலப்படமே இல்லாமல் கிடைக்கும் இங்கே நேற்றுவரை இருந்தநிலை மாறி வாழ்வில் நோய்நொடிகள் இல்லாமல் இருப்பார் இங்கே ! பட்டங்கள் பலபெற்றும் பணியே இன்றிப் பரிதவித்தே ஏங்குகின்ற இளைஞர் கூட்டம் வெட்டியாகச் சுற்றுகின்ற நிலைமை மாறி வெறுங்கையின் சக்திதனைத் திறன்கள் தம்மைத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேலை யின்றித் திண்டாடல் பழங்கதையாய் மாறிப் போகும் கட்டாயம் பணிகிடைக்கும் வகையில்…