பெருந்தலைச் சாத்தனார்: 5 : ந. சஞ்சீவி

(பெருந்தலைச் சாத்தனார் 4 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 23 3. பெருந்தலைச் சாத்தனார் (தொடர்ச்சி) இவ்வாறு சுற்றமும் நட்பும் சூழ மகிழ்ந்து இனிதிருந்த சாத்தனார் சில காலம் கழித்துச் சங்கம் நிறுவிச் செந்தமிழ் புரக்கும் மாடமலி கூடல்மாநகர் காண விழைந்தார்; அவ்வாறே தொல்லாணை நல்லாசிரியர் கூடியிருந்து தமிழாய்ந்து வந்த அப்பழவிறல் மூதூரை அடைந்தார்; அவண் இருந்த சான்றோர்களுடன் உவப்பத் தலைக்கூடி, பன்னாள் இன்புற்றிருந்தார்; பின்னர்த் தம் ஊர் திரும்பும் வழியில் பாண்டியர் படைத்தலைவனும், கோடை மலைக் கிழவனும், வேளிர்…

அகநானூற்றில்  ஊர்கள் : 6/7- தி. இராதா

(அகநானூற்றில் ஊர்கள் 5/7 இன் தொடர்ச்சி)     அகநானூற்றில்  ஊர்கள்  – 6/7     நீடூர்                 எவ்வி என்று குறுநில மன்னனின் ஊர். குறிதப்பாத வாட்படையை உடையவன். யாழ் ஒலிக்கும் தெருக்களையுடைய நீடூரின் தலைவன் என்பதை,                 “யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்                 …………..எவ்வி ஏவல் மேவார்”                           (அகநானூறு 260)                 “பொலம்பூண் எவ்வி நிழல் அன்ன”            (அகநானூறு 366)…

எமனுக்குத் தமிழ் கற்பிக்கச் சென்றார் தமிழறிஞர் மா. நன்னன்!

  எமனுக்குத் தமிழ் கற்பிக்கச் சென்றார் தமிழறிஞர் மா. நன்னன்!    திராவிட இயக்கத்தில் பற்றுக்கொண்ட தமிழறிவை எளியவருக்கும் புகட்டிய தமிழறிஞர் முனைவர் மா.நன்னன் அகவை முதிர்வால் தம் 94 ஆம் அகவையில்  இயற்கை எய்தினார். [சில நினைவுகள்: அறிஞர் நன்னன் ஐயா அவர்களுடனான நினைவுகளில் சிலவற்றைப் பகிர விரும்புகின்றேன். அவர் தமிழ்வளர்ச்சி இயக்குநராக இருந்தபொழுது தமிழ்வளர்ச்சி இயக்ககத்தின் செயல்பாடின்மைபற்றி  கருத்து தெரிவித்தேன். அதற்கு அவர், “நான் பெரியார்வழி வந்தவன். உங்கள் கருத்தைத் தமிழ் ஆர்வத்தில் எழுந்ததாக உணர்கிறேன். ஆனால், பிறர் அவ்வாறு எண்ணாமல்…

மாமூலனார் பாடல்கள் 25: சி.இலக்குவனார்

உரு. எவன் ஆய்ந்தனர்கொல் தோழி! – தலைவி –சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (ஆனி 15, 2045 / சூன் 29, 2014 இதழின் தொடர்ச்சி) திருமணம் நிகழ்ந்தபின் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றுள்ளான். பண்டைத் தமிழ்நாட்டில் திருமணம் நிகழ்ந்த சின்னாட்களில் தலைவன் தலைவியைப் பிரிதல் சிறப்புக்கல்வி பெறும்பொருட்டும், அரசியல் அலுவல் பொருட்டும். பொருளீட்டும் பொருட்டும் நிகழ்ந்தது. இப் பிரிவுகளைப்பற்றிய விரிவுகளைத் தொல்காப்பியர் இலக்கண நூலில் தெளிவுற அறியலாம். இப்பாடலில் வருகின்ற தலைவனும் அவ்வாறே பிரிந்து சென்றுள்ளான். தலைவனைப்பிரிந்த தலைவி வருந்துகின்றாள்….