பாடம் சொல்லும் முறை – நன்னூல்
பாடம் சொல்லும் முறை ஈதல் இயல்பே இயம்பும் காலை காலமும் இடமும் வாலிதின் நோக்கி சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங் கொளக் கோட்டமில் மனத்தில் நூல் கொடுத்தல் என்ப நன்னூல் பாடம் சொல்லும்பொழுது உரிய காலத்தையும் உரிய இடத்தையும் தூயதாகத் தெரிவுசெய்து சிறந்த இடத்திலமர்க; தான் வழிபடும் கடவுளை வணங்கிப், பாடம் சொல்ல வேண்டிய பொருளை உள்ளத்தில் இருத்துக; விரைந்து சொல்லாமலும் சினந்து…
கேட்டல் முறை – பவணந்தி முனிவர்
கேட்டல் முறை ஒருமுறை கேட்போன் இருகால் கேட்பின் பெருக நூலில் பிழைபாடு இலனே முக்கால் கேட்பின் முறையறிந்து உரைக்கும். ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் கால்கூறு அல்லது பற்றலன் ஆகும். அவ் வினையாளரொடு பயில்வகை ஒரு கால் செவ்விதின் உரைப்ப அவ்இரு காலும் மை அறு புலமை மாண்பு உடைத்தது ஆகும். பவணந்தி முனிவர் : நன்னூல் பாடங்கேட்பவன் ஒரு முறையுடன் நில்லாது இரண்டாம் முறையும் கேட்டானாயின், மிகுதியும் பிழையின்றிக் கற்றவனாவான். மூன்றாம் முறையும் கேட்டனாயின், ஆசிரியர் கற்பித்ததை உணர்ந்து பிறர்க்குச் சொல்லும்திறன்பெற்றவனாவான். …
பாடம் கற்கும் முறை – பவணந்தி முனிவர், நன்னூல்
பாடம் கற்கும் முறை நூல் பயில் இயல்பே நுவலின், வழக்கு அறிதல் பாடம் போற்றல்; கேட்டவை நினைத்தல், ஆசாற் சார்ந்து அவை அமைவரக் கேட்டல், அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல், வினாதல், வினாயவை விடுத்தல், என்றுஇவை கடனாக் கொளினே மடம்நனி இகக்கும் நன்னூல் 41 நூல் பயில் இயல்பு நுவலின் – நூலைக் கற்றலின் இயல்பைச் சொல்லின், வழக்கு அறிதல் – உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஆகிய இருவகை நடையையும் ஆராய்ந்து அறிதலும், பாடம் போற்றல் – மூலபாடங்களை மறவாது…
நூலழகு பத்து – பவணந்தி முனிவர், நன்னூல்
நூலழகு பத்து சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நவின்றோர்க்கு இனிமை, நனிமொழி புணர்த்தல், ஓசை உடைமை, ஆழம் உடைத்து ஆதல், முறையின் வைப்பே, உலகம் மலையாமை, விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்தது ஆகுதல், நூலிற்கு அழகு எனும் பத்தே. சுருங்கச் சொல்லல் – சொற்கள் வீணாக விரியாது சுருங்கிநிற்கச் சொல்லுதலும் , விளங்கவைத்தல் – சுருங்கச் சொல்லினும் பொருளைச் சந்தேகத்துக்கு இடமாகாது விளங்க வைத்தலும் , நவின்றோர்க்கு இனிமை – வாசித்தவருக்கு இன்பத்தைத் தருதலும் , நன்மொழி புணர்த்தல் – நல்ல சொற்களைச் சேர்த்தலும்…
நூலில் வரக்கூடாக் குற்றங்கள் பத்து – பவணந்தி முனிவர், நன்னூல்
நூலில் வரக்கூடாக் குற்றங்கள் பத்து குன்றக் கூறல், மிகைபடக் கூறல், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், வழூஉச் சொல் புணர்த்தல், மயங்க வைத்தல், வெற்று எனத் தொடுத்தல், மற்று ஒன்று விரித்தல், சென்று தேய்ந்து இறுதல், நின்று பயன்இன்மை, எவை இவை ஈர் ஐங் குற்றம் நூற்கே குன்றக் கூறல் – குறித்த பொருளை விளக்குதற்கு வேண்டுஞ் சொற்களில் குறைவுபடச் சொல்லுதலும் , மிகைபடக் கூறல் – குறித்த பொருளை விளக்குதற்கு வேண்டும் சொற்களினும் அதிகப்படச் சொல்லுதலும் , கூறியது கூறல் –…
ஆர்வத்துடன் கற்க! – பவணந்தி முனிவர்
ஆர்வத்துடன் கற்க! கோடல் மரபே கூறும் காலை பொழுதொடு சென்று வழிபடல் முனியான் குணத்தொடு பழகி அவர் குறிப்பிற் சார்ந்து இருஎன இருந்து சொல்எனச் சொல்லி பருகுவன் அன்ன ஆர்வத்தனாகிச் சித்திரப் பாவையின் அத்தக அடங்கிச் செவிவாயாக நெஞ்சு களனாக கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப் போவெனப் போத லென்மனார் புலவர் பவணந்தி முனிவர் : நன்னூல்: 40 காண்டிகையுரை கோடல் மரபு கூறுங்காலை – பாடங் கேட்டலினது வரலாற்றைச் சொல்லும் பொழுது , பொழுதொடு சென்று – தகும் காலத்திலே போய்…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 8 இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 7 தொடர்ச்சி) 08 “தமிழர் தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார். அவ்வாறு கற்காத காரணத்தினால்தான் இந்நாட்டில் அறிவியற் பேரறிஞரும் கலையியற் பேரறிஞரும், இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தைக் கற்றும் தோன்றும் நிலை ஏற்படவில்லை. தாய்மொழி வாயிலாக உயர் கல்வியைக் கற்ற நாட்டில் ஆங்கிலத்தின் உதவியின்றியே உலகம் போற்றும் உயர் அறிஞர்கள் தோன்றியுள்ளனர். ஆதலின் ஆங்கிலம் அகன்றால் அறிவியல் வளராது என்ற தவறான எண்ணம் நம்மை விட்டு அகலுதல் வேண்டும். பிற நாடுகளைப் போன்றே…