நன்றல்லதை அன்றே மறத்தல் நன்று! – புலவர் தி.வே.விசயலட்சுமி
நன்றல்லதை அன்றே மறத்தல் நன்று “ தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு” (குறள்-129) தீயினாற் சுடப்பட்டு உண்டான புண் வடுவாக இருப்பினும் மனத்தில் ஆறிவிடும். நாவினாற் சுட்ட வடு மனத்தி லென்றும் ஆறாது என்பது இக்குறட்பாவின் கருத்து. கழிந்த காலமும், விடுத்த அம்பும், சொன்ன சொல்லும் திரும்பிப் பெற முடியாது என்பதும் உண்மையே ‘யாகாவாரயினும் நாகாக்க’ என்பது குறள் நீதி. ஒருவன் நண்பன்தான். தன்னை மறந்து கடுஞ்சொற்கள் பேசி விடுகிறான். சில மணித்துளிகளில் நிலைமைக்கு வந்து மன்னிப்புக்…