‘நம் குடும்பம்’ மாத இதழ் அறிமுகம்
நேசமிகு தோழமையே! வணக்கம். ‘நம் குடும்பம்’ மாத இதழை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன். ‘நம் குடும்பம் ‘ தமிழகத்திலிருந்து வெளிவரும் இணையருக்கான, ஒரே மாத இதழ். ‘வாசிப்பதற்கு மட்டுமல்ல வாழ்வதற்கு(ம்)’ என்பதே இதன் சங்கநாதம். முற்றிலும் குடும்பங்களின் நல்வாழ்வை மையப்படுத்திய படைப்பாக்கங்கள் மட்டுமே இவ்விதழில் இடம்பெறும். அரசியல், சமயம், ஆபாசம் இம்மூன்றையும் தவிர்த்த ஒட்டுமொத்த குடும்பத்திற்குமானது ‘நம் குடும்பம்’. ‘நம் குடும்பம்’ மாத இதழ் இதுவரை 21 மாதங்கள் வெளிவந்திருக்கின்றது. குடும்ப உறவுகளின்அடிப்படையையும், இன்றியாமையாமையும் அன்பிற்கும் பண்பிற்கும் பெயர்பெற்ற நம் மண்ணின் இளையதலைமுறைக்குப் புரிய வைப்பதற்கான தொடர்…