என்றும் நமக்கு நன்னாளே! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஒவ்வொரு நாளும் பிறக்கின்றோம் எல்லா நாளும் சிறந்திடுவோம்! வாழ்க்கை என்பது வாழ்ந்திடவே வாழும் முறைப்படி வாழ்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது போராட்ட மானால் போரில் கலந்து வென்றிடுவோம்! வாழ்க்கை என்பது விளையாட் டெனில் ஆடி வாகை சூடிடுவோம்! வாழ்க்கை என்பது பயண மாயின் இனிதே இலக்கை அடைந்திடுவோம்! வாழ்க்கை என்பது கேளிக்கை என்றால் பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது கணக்கு எனவே கணித்துப் பார்த்துத் தேர்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது வரலா றாகச் செம்மைச் செயலால் செதுக்கிடுவோம்! வாழ நாமும் பிறந்து விட்டோம் வாழ்ந்தேதான் காட்டிடுவோம்!…