தீர்ப்புரைஞரும் வழக்குரைஞரும் இணையாக இருந்தால்தான் நீதி பிறக்கும் – இலக்குவனார் திருவள்ளுவன்
தீர்ப்புரைஞரும் வழக்குரைஞரும் இணையாக இருந்தால்தான் நீதி பிறக்கும் ‘நயன்’ என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்துதான் [நயன் > நயதி > நியதி >] நீதி என்னும் சொல் பிறந்துள்ளது. எனவே, நீதி என்பதைத் தமிழ்ச்சொல் என உணர்ந்து கையாள்வோம். ‘பதி’ என்பது தங்குமிடத்தையும் தலைவனையும் வேறு சில பொருள்களையும் குறிக்கும். நீதி தங்கியிருக்க வேண்டிய இடம் என்னும் பொருளிலும் நீதி வழங்கும் மன்றத்தின் தலைவன் என்ற முறையிலும் முறைமன்றத்தின் தலைவர் நீதிபதி எனப்படுகிறார். எனவே, நீதிபதியும் தமிழ்ச்சொல்லே! நீதிபதியைத் தமிழ்ச்சொல்லல்ல எனக் கருதியும் ‘justice’ …