நரேந்திர(மோடி)க்குப் பாராட்டுகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
நரேந்திர(மோடி)க்குப் பாராட்டுகள்! எண்ணிய இலக்கை அடைந்து வெற்றி காண வாழ்த்த வேண்டும். இலக்கை அடைந்து விட்டார் என்றால் – வெற்றி கண்டுவிட்டார் என்றால் – பாராட்ட வேண்டும். அந்த வகையில் இரண்டாம் முறையாகத் தலைமை யமைச்சர் பொறுப்பேற்கும் வகையில் வெற்றி கண்டுள்ள நரேந்திர(மோடி)க்குப் பாராட்டுகள்! இலக்கு மட்டுமல்ல, இலக்கை அடையும் வழியும் நேர்மையானதாக – அறவழிப்பட்டதாக – இருக்க வேண்டும் என்பது தமிழர் நெறி. “எந்த வழியில் சென்றேனும் இலக்கை அடை” என்பது ஆரிய நெறி. இன்றைய தேர்தல் நெறி என்பது இரண்டாம் வகையைச்…
பட்டியல் சாதியர் நலன்காக்கக் கைக்கட்டுடன் மடல் எழுதிய முதல்வர் பழனிச்சாமி
பட்டியல் சாதியர் நலன்காக்கக் கைக்கட்டுடன் மடல் எழுதிய முதல்வர் பழனிச்சாமி மததிய பாசக அரசு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பட்டியல் சாதியர், பட்டியல் இனத்தவர், பிற்பட்டோர், சிறுபான்மையர் நலனுக்கு எதிராகவே நடந்து கொள்கிறது. அவற்றில் ஒன்றுதான் கடந்த ஆண்டு தனியார் நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் பட்டியல் சாதியர், பட்டியல் இனத்தவர், பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்துவது. அவர்கள் செலுத்திய கல்விக்கட்டணத்தைத் திரும்பப்பெறும் வகையில் தரப்பட்ட இவ்வுதவித்தொகையை நரேந்திர(மோடி) அரசு கடந்த ஆண்டு நிறுத்தி விட்டது. எனினும் தமிழ்நாடுஅரசு நிறுத்தவில்லை….
செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம் மூடலுக்குப் பாராட்டு! உறுதியாய் நிற்க வேண்டுகோள்!
செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம் மூடலுக்குப் பாராட்டு! உறுதியாய் நிற்க வேண்டுகோள்! பதின்மூவருக்குக் குறையாத உயிர்ப்பலிக்கும் நூற்றுக்கணக்கானவர்களின் படுகாயங்களுக்கும் பிறகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகத்தை மூட ஆணை பிறப்பித்துள்ளார். சுற்றுச்சூழல் வனத்துறை அரசாணை (பல்வகை) எண் 72 நாள் வைகாசி 14, 2049 / மே 28, 2048 இனபடி அரசு இதனை நிலையாக மூட ஆணை பிறப்பித்துள்ளது. துணை முதல்வர் பன்னீர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் செயக்குமார், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் இராசு, ஆதி திராவிடர்…
மக்கள் நாயகம் கொல்லப்பட்டது! மக்களும் கொல்லப்பட்டனர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மக்கள் நாயகம் கொல்லப்பட்டது! மக்களும் கொல்லப்பட்டனர்! தொடங்கியது நரேந்திர(மோடி) அரசு! முடித்தது எடப்பாடி பழனிச்சாமி அரசு! வேதாந்த வள வரையறு நிறுவனம் (Vedanta Resources plc,)என்பது உலக அளவில் சுரங்கத் தொழிலிலும் மாழை (உலோக)வணிகத்திலும் ஈடுபட்டு வரும் நிறுவனமாகும். இதன் சார்பு அமைப்பாகத் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் ஊரில் சுடெருலைட்டு தொழிலகம் (Sterlite Industries) என்னும் செம்பு உருட்டாலை அமைக்கப்பட்டது. இந்தியத் தேசியப்பேராயத்தின் நரசிம்ம(ராவு) ஆட்சியில் ஒப்புதல் பெறப்பட்ட இத்தொழிலகத்திற்கு 1993 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கே செம்புக்கம்பி,…