இந்தியாவின் எதிர்காலம் குசராத்தியர் கைகளில்! – இலக்குவனார் திருவள்ளுவன்
இந்தியாவின் எதிர்காலம் குசராத்தியர் கைகளில்! பேச்சுத்திறன் மிக்கவன், பொய்யை மெய்யென நம்ப வைக்கும் திறமை பெற்றவனாக இருக்கிறான்; வறுமையில் வாழ்பவர்களையும் வளமாக வாழ்வதுபோல் நம்ப வைக்கும் ஆற்றல் உடையவனாக இருக்கிறான்; இன்னலில் வாழ்பவர்களிடமே இன்பத்தில் வாழ்வதுபோல் கருத வைக்கும் வல்லவனாக இருக்கிறான். இச்சூழலில் பொய்யர்களைக் குறை சொல்வதா? தங்கள் நிலையைக் கூட உணரா மக்களுக்காக இரக்கப்படுவதா? அறியாமை இருளில் மூழ்கியிருக் கச் செய்யும் ஆட்சியாளர்களைக் குறை சொல்வதா? பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய் போலும்மே; மெய்போலும்மே (அதிவீரராம பாண்டியர், வெற்றிவேற்கை 73) …
பணம் செல்லாமை : இன்னலுக்கு ஆளாக்கப்படுபவர்களையே பொன்மாலை சூட்டச்செய்யும் நரேந்திரர்(மோடி) 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்
[பணம் செல்லாமை : இன்னலுக்கு ஆளாக்கப்படுபவர்களையே பொன்மாலை சூட்டச்செய்யும் நரேந்திரர்(மோடி) 1/2 தொடர்ச்சி] பணம் செல்லாமை : இன்னலுக்கு ஆளாக்கப்படுபவர்களையே பொன்மாலை சூட்டச்செய்யும் நரேந்திரர்(மோடி) 2/2 சுவிசு நாட்டு வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் இருந்து 72,80,000 கோடிஉரூபாய் மதிப்பிலான தாலர் பணம் அந்நாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதது. இந்தியாவிலிருந்து மொரிசியசு முதலான நாடுகளுக்குக்கருப்புப்பணம் சென்று வெள்ளைப்பணமாக மீண்டும் இந்திய முதலீடாக மாறுகிறது என்றும் பொருளியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர் நைசீரியா, கானா, பாக்கித்தான், சிம்பாவே, வடகொரியா, சோவியத்து ஒன்றியம்,…
மனிதச் சங்கிலியில் கை கோப்போம்! – சுப.வீரபாண்டியன் அறிக்கை
மனிதச் சங்கிலியில் கை கோப்போம்! 500, 1000 உரூபாய்த் தாள்களைச் செல்லாது என்று அறிவித்து, ஏழை, எளிய மக்களைப் பெரும் இன்னலுக்குஆளாக்கியுள்ள, தலைமையர் நரேந்திரர்(மோடி) தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து, தி.மு.கழகம் வரும் 24ஆம் நாள், தமிழ்நாடு முழுவதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதனைத் திராவிட இயக்கத்தமிழர் பேரவை முழுமையாக ஆதரித்து வரவேற்பதுடன், பேரவையின் தோழர்கள் அனைவரும் இந்த மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் கைகோத்து நிற்க முடிவெடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆகவே, தோழர்களே மனிதச்சங்கிலியில் திரளாகக் கலந்துகொண்டு கை கோத்து இணைய வேண்டுகிறோம். …