வந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரு விழா
வந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரு விழா வந்தவாசி. நவ.29. வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தில் நூலக வாசகர் வட்டம், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம், எசு.ஆர்.எம். இன்போடெக்கு கணிணிப் பயிற்சி மையமும் இணைந்து நடத்திய முப்பெரு விழா நூலகக் கட்டடத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். நூலகர் க.மோகன் அனைவரையும் வரவேற்றார். இராமலிங்கம் எரிநெய் நிலைய உரிமையாளர் இரா.சிவக்குமார், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக…