நல்லதை நாட்டுவதே நம்பணி! – தமிழ்சிவா
நல்லதை நாட்டுவதே நம்பணி! மஞ்சள் நிறத்தொரு பூனை மக்களை ஏமாற்றும் பாரீர் கொஞ்சல் மொழிகள் பேசி நெஞ்சம் பிளக்கும் பாரீர்!! சந்தியில் தமிழன் சாகும்போதும் சத்தியம் வெல்லுமெனும் பாரீர்! முந்தியது என்றாலும் அதன் முகத்தையே மாற்ற வேண்டும்! பச்சை நிறத்தொரு பூனை பாரில் வளருது பாரீர்! இச்சை கொண்டது அப்பூனை ஈடிலாப் பதவி மேலே! நச்சைக் கொணர்ந்து ஊட்டும் நல்ல திறமை அதற்குண்டு! எச்சில் என்றே நினைக்கும் யாரையும், எடுத்தெறிய வேண்டும்! மாம்பழம் தின்றிடும்…