இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 47 : பழந்தமிழும் தமிழரும் 7
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 46 : பழந்தமிழும் தமிழரும் தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 7 ஆனால், இன்றைய நிலைமை என்ன? பிசிராந்தையார் கூற்றுக்கு மாறுபட்டன்றோ இருக்கின்றது. இளமையிலேயே நரைபெற்று முதுமையடைந்து விடுகின்றோம். ஏன்? யாண்டு பலவின்றியும் நரையுள வாகுதல் யாங்கா கியர் என வினவுதி ராயின்? ஆண்டநம் மக்கள் அடிமைக ளாயினர்; பூண்டநம் பண்பு போலிய தாகின்று நற்றமிழ் மறந்தனர்; நானில மதனில் பிறமொழிப் பற்றில் பெரியோ ராயினர்; தமிழகத் தெருவில் தமிழ்தான் இல்லை; ஊரும் பேரும் உயர்மொழி வழக்கும் அயல்மொழி தன்னில்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 46 : பழந்தமிழும் தமிழரும் 6
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 45 : பழந்தமிழும் தமிழரும் தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 6 உவமை நயந்தான் என்னே! இவ்வளவு பொருத்தமாக யாராலும் கூறமுடியாது. வந்து அகப்பட்டுக் கொண்டால் புலியின் மீது விழுந்த குருடன் போன்றவன் என்பதில் எவ்வளவு பொருட் செறிவு இருக்கின்றது. பகைவனைக் குருடனாக்கிக் தன்னைப் புலியாக்கிக் கொண்ட சிறப்புதான் என்ன! அன்றியும் புலியிடம் வலியச் சென்று மாள்வது போலத் தன்னிடம் வலியப் போருக்கு வந்ததனால் மாளுகின்னான் என்பதும் வெளிப்படுகின்றது. அழிப்பதின் எளிமையை விளக்க அழகான உவமை. யானைக் காலில் அகப்பட்ட…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 45 : பழந்தமிழும் தமிழரும் 5
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 44 : பழந்தமிழும் தமிழரும் தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 5 குழந்தையைப் பெற்று வளர்த்தல் தாய்க்கு உரிய பெரும் பொறுப்பாக இருந்துளது. அப் பொறுப்பை அக்காலப் பெண்டிர் நன்கு உணர்ந்திருந்தனர். நாம் என்ன பிள்ளைபெறும் எந்திரமா? என்று வெறுத்து மணவாழ்க்கையை விட்டுவிடவில்லை. அப் பொறுப்பை உணர்ந்த அன்னையொருத்தி மிகப் பெருமையுடன் கூறிக்கொள்ளுவதை நோக்குங்கள். ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நல்நடை நல்கல் வேந்தற்குக்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 44 : பழந்தமிழும் தமிழரும் 4
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 43 : பழந்தமிழும் தமிழரும் 3 தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 4 பெண்களுக்கு அக்காலத்தில் எல்லா உரிமைகளும் இருந்தன. விரும்பிய கணவனை மணக்கும் உரிமையும் இருந்தது. மணவினைச் சடங்குகளும் நிகழ்ந்தன. மணவினை நிகழ்வதற்கு முன்னர்ச் சிலம்புகழி நோன்பு என்ற ஒரு சடங்கு நிகழ்ந்துளது. அது மணமகன் வீட்டிலோ மணமகள் வீட்டிலோ நடைபெறும். அச் சடங்கில் புரோகிதர்களோ பொருள் விளங்கா மந்திரங்களோ இல்லை. பெண்களே நடத்தி வைத்தனர். அத் திருமணச் சடங்கு பற்றி நல்லாவூர் கிழார் கூறியுள்ளார். …