சிறிலங்காவின் ‘நள்ளிரவு’ நீதி பன்னாட்டு நீதிபதிகளுக்கான தேவையினை வலுப்படுத்துகிறது.
சிறிலங்காவின் ‘நள்ளிரவு’ நீதி பன்னாட்டு நீதிபதிகளுக்கான தேவையினை வலுப்படுத்துகிறது. மனித உரிமை மன்றமே! வட கொரியாவைப் போல் சிறிலங்காவையும் ஐ–நா பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்புக! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு நடராசா இரவிராசு அவர்களது கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட எதிரிகள் அனைவரையும் கடந்த 2016 திசம்பர் 24ஆம் நாள் சிறிலங்காவின் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இரவிராசு அவர்கள் 2006 ஆம்ஆண்டு நவம்பர் 10ஆம் நாள் ஊர்தியில் பணிக்குச் சென்று கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். கொழும்பு நகர்மையப்பகுதியில் காவல்துறை – பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் பலவற்றுக்கும் கூப்பிடு தொலைவில் பட்டப்பகலில்கொலைகாரர்கள் அவர் வண்டியின் மீது சுட்டார்கள். இரவிராசு படுகொலைக்காக 2015 நவம்பர்…