திருக்குறளுக்குக் களங்கம் கற்பித்த நாகசாமிக்குக் கண்டனக் கூட்டம்

பங்குனி 10, 2050  ஞாயிற்றுக்கிழமை 24.3.2019  மாலை 5.30 மணி இடம்: அறிஞர் அண்ணா பொதுநல மன்றம் (ஆர்க்காட்டுச் சாலை சரவணபவன் எதிரில், வடபழனி, சென்னை) பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், அனைத்துத் திருக்குறள் பேரவை, தமிழ் இலக்கிய அமைப்புகள் இணைந்து – நடத்தும் – திருக்குறளுக்குக் களங்கம் கற்பித்த நாகசாமிக்குக் கண்டனக் கூட்டம் திருக்குறள் வணக்கம்: குறளிசைச் செல்வர் சொ.பத்மநாபன்  தொடக்கவுரை: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் (தமிழ் எழுத்தாளர் கழகம்)  அறிமுகவுரை: கவிச்சிங்கம் கண்மதியன் (பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்)  தலைமை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (உலக அமைப்பாளர்,…

திருக்குறளை இழிவுபடுத்திய நாகசாமி நியமனத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

மாசி 25, 2050 சனி  09.03.2019 காலை 10.30 வள்ளுவர் கோட்டம் அருகில் சென்னை திராவிட இயக்கத் தமிழர் பேரவை

செம்மொழி விருதுக் குழுவில் நாகசாமி: தமிழுக்குப் பேரிழுக்கு!

செம்மொழி விருதுக் குழுவில் நாகசாமி: தமிழுக்குப் பேரிழுக்கு!- மு.க.தாலின் கண்டனம் செம்மொழி திறனாய்வு நிறுவனத்தின் குடியரசுத் தலைவர் விருதுக்  குழுவிலிருந்து தமிழுக்கு எதிரான நாகசாமியை நீக்க வேண்டுமெனத் திமுக தலைவர் முக.தாலின் வலியுறுத்தியுள்ளார். வேதங்களிலிருந்து திருக்குறள் வந்தது எனத் திருவள்ளுவரைச் சிறுமைப்படுத்திய முன்னாள் தொல்லியியல் அதிகாரி நாகசாமியை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருதுகளைத் தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக நியமித்திருப்பதற்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாக மு.க.தாலின் கூறியுள்ளார்.  இதுதொடர்பாக நேற்று (மார்ச்சு 2) வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

குறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா?

குறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா? கலி.பூங்குன்றன் மனுதருமத்தின் சாரம் திருக்குறள் (Tirukkural an Abridgement of Sastras) என்று பார்ப்பன நாகசாமியால் எழுதப்பட்ட ஆங்கில நூலுக்கான மறுப்புக் கூட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவருக்கே உரித்தான முறையில் ‘நச்சு நச்சு’ என்று கொடுத்தார் சாட்டையடி! வரவேற்புரையாற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் குறிப்பிட்ட ஒரு தகவலைத் தெடர்ந்து நாகசாமியை எம்ஞ்சியார் மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர்…

திருக்குறள் மனுதருமத்தின் சாராமா?- நாகசாமி நூலுக்கு எதிருரை

ஐப்பசி 21, 2049 / புதன்கிழமை / 07.11.2018  மாலை 6.30 – இரவு 8.30 நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றம் பெரியார் திடல், சென்னை 600 007 திருக்குறள் மனுதருமத்தின் சாராமா?- நாகசாமி நூலுக்கு எதிருரை சிறப்புப்பொதுக்கூட்டம் தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வரவேற்பு:  கவிஞர் கலி.பூங்குன்றன் கருத்துரை: முனைவர் மறைமலை இலக்குவனார் எழுத்தாளர் பழ.கருப்பையா பேரா.சுப.வீரபாண்டியன் திராவிடர் கழகம்