தமிழர் நாகரிகம் (தொடர்ச்சி)–சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 21 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 22 11. நாகரிகம் (தொடர்ச்சி) அணிகலன்கள் அணிந்து கொள்வதில் ஆடவரும் பெண்டிரும் பெருமகிழ்வு காட்டினர். தலைமுதல் கால் வரையில் அணியக்கூடிய அணிகலன்களைப் பெற்றிருந்தனர் (புறநானூறு-378). அணிகலன்கள் பொன்னாலும் முத்தாலும் மணியாலும் செய்யப்பட்டிருந்தன (குறிஞ்சிப் பாட்டு ). மணமகளுக்குத் தாலியணிதலும் அதனை ‘ஈகை யரிய இழையணி’(புறநானூறு-127) எனலும் உண்டு. மணமகன், மணமகளுக்குக் கையுறையாக அணிகலன்கள் அளித்தலும் அவற்றுள் காதலை அறிவிக்கும் அடையாளம் பொருந்திய மோதிரம்…
‘கலாச்சாரம்’ தேவையா? – இலக்குவனார் திருவள்ளுவன்
‘கலாச்சாரம்’ தேவையா? – இலக்குவனார் திருவள்ளுவன் ‘கலையும் கலாச்சாரமும்’, ‘கலாச்சாரமும் பண்பாடும்’, ‘கலையும் கலாச்சாரமும் பண்பாடும்’ என்றெல்லாம் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். கலாச்சாரம் என்பதைப் பண்பாடு என்னும் பொருளில்தான் பெரும்பாலும் கையாள்கின்றனர். சில இடங்களில் கலை என எண்ணிக் கையாள்கின்றனர். கலை – பண்பாட்டுத்துறை என்பதைக் கலை – கலாச்சாரத்துறை என்றே குறிப்பிடுகின்றனர். எனவே, கலையும் கலாச்சாரமும் என்றால் கலையும் பண்பாடும் என்று கருதுவதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், கலாச்சாரமும் பண்பாடும் என்றால் என்ன பொருள்? நாகரிகமும் பண்பாடும் என்று பொருள் கொள்ள இயலவில்லை,…
ஆரியர் தமிழர் தொடர்பால் சமற்கிருதத்தை அமைத்துக் கொண்டனர் – பாவாணர்
இந்திய நாகரிக அடிப்படை தமிழ் நாகரிகமே! இந்திய ஆரியர் பிற்காலத்தில் தமிழரொடு தொடர்பு கொண்ட பின்னரே, சமற்கிருதம் என்னும் அரைச் செயற்கையான இலக்கிய நடை வழக்கை அல்லது பொத்தக மொழியை அமைத்து, அதிற் பண்டைத் தமிழ் நூல்களையெல்லாம் மொழிபெயர்த்துக் கொண்டனர். இது என் ‘வடமொழி வரலாறு‘ என்னும் நூலில் விரிவாக விளக்கப்பெறும். தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்கள். தமிழ் தோன்றியது முழுகிப்போன குமரிக்கண்டத்தில் 50,000 ஆண்டுகட்குமுன். தமிழ் நாகரிகம் தோன்றியது 20,000 ஆண்டுகட்குமுன். தமிழிலக்கண விலக்கியம் தோன்றியது கி.மு.10,000 ஆண்டுகட்குமுன். இதன்…
நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் வேறுபாடு – பாவாணர்
அகச் செம்மை பண்பாடு; புறச் செம்மை நாகரிகம் நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. அது எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துவது. பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம். அது எல்லாப் பொருள்களையும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்துவது. இலக்கணப் பிழையின்றிப் பேசுவதும், எல்லாவகையிலும் துப்புரவாயிருப்பதும், காற்றோட்டமுள்ளதும் உடல் நலத்திற் கேற்றதுமான வீட்டிற் குடியிருப்பதும், நன்றாய்ச் சமைத்து உண்பதும், பிறருக்குத் தீங்கு செய்யாமையும், நாகரிகக் கூறுகளாம்; எளியாரிடத்தும் இனிதாகப் பேசுவதும், புதிதாய் வந்த ஒழுக்க முள்ள அயலாரை விருந்தோம்புவதும், இரப்போர்க்கிடுவதும், இயன்றவரை பிறருக்குதவுவதும், கொள்கையும் மானமுங் கெடின் உயிரை…
இலக்கியவீதி-மறுவாசிப்பில் தமிழ்வாணன்,சென்னை
பேரன்புடையீர் வணக்கம். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாத நிகழ்வாக, கார்த்திகை 03, 2046 / 19.11.2015 அன்று மாலை 6.30 மறுவாசிப்பில் தமிழ்வாணன் உறவு நட்போடு வருகை தர வேண்டுகிறோம்.
குறளின்பம் : தம்மில் இருந்து தமது பாத்துண்டற்றால் – தமிழநம்பி
தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. – குறள். 1107 இது, காமத்துப்பாலில், புணர்ச்சிமகிழ்தல் அதிகாரத்தில் ஏழாம் குறளாகும். இக்குறளின் பொருள் : அழகும் ஒளிறும் மாநிறமும் பெற்ற அருமை நிறைந்த காதலியொடு கொள்ளும் புணர்ச்சித் தழுவல், தமக்குச் சொந்தமான உரிமை இல்லத்தில் இருந்துகொண்டு, தம்முடைய சொந்த முயற்சியால் முறையாக ஈட்டிய வருவாயைக்கொண்டு சமைத்து உருவாக்கப்பட்ட உணவைத், தாமும் விருந்தினருமாக, நிறைவாரப் பகுத்துஉண்டு மகிழும்போது ஏற்படும் உரிமையும் பெருமிதச் செம்மாப்பும் கொண்ட, மனம் நிறைந்தெழும் இன்பநிலைக்கு நேர் இணையானது என்பதாகும்….
ஆரியருக்கு நாகரிக வாழ்வைக் கற்றுக் கொடுத்தவர் தமிழரே
இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே அதாவது ஆரியர் இந்திய நாட்டுள் நுழைவதற்கு முன்னமே தமிழர் தம் முன்னோர் நாகரிகத்திற் சிறந்தராய் இருந்து நாகரிகம் இல்லா ஆரியர்க்கு நாகரிக வாழ்க்கையினைக் கற்றுக் கொடுத்தாராதலால் அத்தகைய முன்னோரின் மரபில் வந்த தமிழர்கள் தமது பழம்பெருமையை உணர்ந்து அதற்கேற்ப நடத்தல் வேண்டும். தமிழ் முன்னோர்கள் தமது தமிழ் மொழியைப் பிறமொழிக் கலப்பின்றித் தூய்தாய் எல்லாவளனும் நிரம்ப வளர்த்து வழங்கி வந்தவாறுபோல, இஞ்ஞான்றைத் தமிழருந் தமிழ்மொழியைத் தூய்தாய் வளனுற வளர்த்து வருதல் வேண்டும். ஒவ்வொரு மக்கட்குழுவினருந் தமது…
தமிழர்கள் தம் பண்புகள் பலவற்றை ஆரியருக்கு வழங்கினர்
தமிழர்கள் தம் பண்புகள் பலவற்றை ஆரியருக்கு வழங்கினர் திராவிடர் நாகரிகத்தைப் பற்றிப் பல அறிஞர் கொண்ட புதுமையான கருத்துகள் வியப்பைத் தருவனவாகும். மிகப் பழைய காலத்திலும் திராவிடர் நாகரிகம் ஆரியர் நாகரிகத்துடன் கலந்திருந்தது எனக் கொண்டு அதற்குச் சான்று காட்ட முயன்றனர் இவர். பார்ப்பனரின் ஆதிக்கத்தினால் திராவிடருக்கு உரிய பண்பாடு ஆரியருக்குரிய பண்பாட்டோடு தொடர்புபடுத்தப்பட்டது. இக்காரணத்தால் மிகவும் பழைய தென்னாட்டு நாகரிகத்தை விளங்கிக் கொள்வது மிகவும் கடினமாக விட்டது. எனினும் பழங்காலத்தில் தென்னாட்டவரின் பண்பாடு ஆரியக் கலப்பு அற்றிருந்ததென ஓரளவுக்கு நிறுவலாம்….
ஆரியர் இயல்பு – பேராசிரியர் மு.வ
ஆரியர் இயல்பு – பேராசிரியர் மு.வ தம்மை உயர்வாகக் கருதிக் கொண்டு பிறரைத் தாழ்த்தும் மனப்பான்மை எல்லோரிடமும் உள்ளது. எனினும், ஆரியர்க்கு அது மிகுதி எனலாம். அவர்கள் சென்று தங்கிய இடங்களில் எல்லாம் அங்குள்ளவர்களோடு கலந்து பழகி அவர்களின் நாகரிகப் பழக்க வழக்கங்களையும் கலைகள் முதலியவற்றையும் தம்முடையனவாக ஆக்கிக் கொண்டு உயர்வெல்லாம் தமக்கே என்றும் அங்கு வாழ்வோர் அனைவரும் காட்டு மிராண்டிகள் என்றும் தூற்றும் இயல்பினராக விளங்கினர். ஆரிய திராவிட நாகரிகம். இன்று ஆரியம் என்று போற்றப்படுபவை எல்லாம் உண்மையாகவே ஆரியர்க்கு உரியவை…
தமிழர்தாயகம் நாகரிகத்தின் தொட்டில்
ஆரியக் கூத்தாடுகிறார் சோழவந்தான் சுப்பிரமணியன் சுவாமி!- பழ. கருப்பையா
வேத நாகரிகம் அணிந்து வருகின்ற முகமூடிதானே இந்து நாகரிகம் “திராவிடத்தைப்பற்றி வாய் கிழியப் பேசுகிறார்கள்; “திராவிடன்” என்று எவனாவது இருக்கிறானா என்று மரபியல் சோதனை (genetic test ) செய்து பார்த்தும் எந்தத் திராவிடனும் இல்லை என்ற முடிவுதான் எட்டப்பட்டிருக்கிறது.” ”ஆரியனும் இல்லை; திராவிடனும் இல்லை. எல்லா இந்தியர்களும் ஒரே வகையான மரபணுக்களைத்தான் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இங்கே உள்ள வரலாற்று நூல்கள் மட்டும், ‘இந்தியா பல இனங்களை உள்ளடக்கிய (multi-ethnic) ஒரு நாடு” என்று பேசுகின்றன. ஆகவே, நேரு காலத்து வரலாற்று…