அதிமுக–திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்: விசயகாந்து
நாகை நாடாளுமன்றத் தொகுதி தேசிய சனநாயகக் கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் இராவணன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விசயகாந்து திருவாரூர் கீழவீதியில் பரப்புரை ஆற்றினார். “கடந்த முறை தேர்தல் பரப்புரையின்பொழுது தவிர்க்க இயலாத காரணத்தினால் திருவாரூர் வர இயலவில்லை. அதற்காக முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எங்கள் கூட்டணி மக்கள் கூட்டணி, வெற்றிக் கூட்டணி, தேசிய சனநாயகக் கூட்டணி. தமிழக மக்களுக்கு நல்லது நடப்பதற்காகக் கூட்டணி வைத்துள்ளோம். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. தண்ணீர் இல்லை, மின்சாரம்…