(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 4/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 5/17   காடுதனில் வாழ்விலங்கும் கல்லும் உருகுவண்ணம்பாடுதற்குத் தமிழிசைகள் பலவுண்டால் அம்மானைபாடுதற்குத் தமிழிசைகள் பலவுண்டாம் என்றிடினேபீடுற்ற தமிழிசையின் பெயர்களெங்கே அம்மானைகள்வர் பெயர்மாற்றிக் களவுசெய்தார் அம்மானை       (21) செந்தமிழ்த் தெய்வத்தைச் சிறந்தநம் முன்னோர்கள்பைந்தமிழ்ப் பண்களால் பாடினர்காண் அம்மானைபைந்தமிழ்ப் பண்களால் பாடினரே யாமாகில்இன்தமிழில் இசையில்லை என்பதேன் அம்மானைஎன்பவர் ஆராய்ச்சி யிலாதவரே யம்மானை       (22) ஒருகால் உரைத்தாலும் உவப்பளிக்கும் தமிழிசைகேட்(டு)உருகாத உயிர்ப்பொருளே ஒன்றுமில்லை…