தேனிமாவட்டத்தில் பாதுகாக்கப்படும் நாட்டாண்மைக்கல்   தேனிமாவட்டத்தில் பகுதியில் நாட்டாண்மைக்கல் இன்றும் சில சிற்றூர்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.   பண்டைய காலத்தில் மக்கள் இனக்குழுக்களாக வாழ்ந்து வந்தனர். ஓர் ஊரில் கிணறு, குளம், ஆலமரம், கோயில் போன்ற அடையாளங்கள் இருக்கும். இவ்வாறு ஆலமரம் அல்லது அரசமரத்தின் கீழ் ஒரு கல்வைக்கப்பட்டிருக்கும். அந்தக்கல்லில் அந்த ஊரில் குடும்பத்தகராறு, வாய்க்கால் வரப்புகள் தகராறு, திருமணத்தகராறு, பாகப்பிரிவினை முதலான அனைத்திற்கும் ஊர் நாட்டாண்மையிடம் அப்பகுதி மக்கள் முறையிடுவார்கள். முறையிட்ட பின்பு குறிப்பிட்ட நாள் குறித்து ஊர் மக்கள் அனைவரும் ஒன்று…