கம்பன் விழா, பிரான்சு
புரட்டாசி 07 & 08 , 2048 சனி 23& 24.09.2017 15.00 மணி முதல் கம்பன் விழா, பிரான்சு நாட்டியம் வாழ்த்துரை விருதுகள் வழங்கல் சிறப்புரை பாட்டரங்கம் பட்டிமன்றம் ஆய்வுரை கவிமலர் பாவலர் பட்டம் வழங்கல் வழக்காடு மன்றம் சுழலும் சொற்போர் விருந்தோம்பல்
பண்ணும் பரதமும் வடக்கே தோன்றியது என்றால் அங்கே ஏன் இல்லை?
சாரங்கத்தேவர்தான் கருநாடக இசையை உண்டாக்கியவர் என்றும், பரத முனிவர்தான் பரத நாட்டியத்தைக் கண்டு பிடித்தவர் என்றும் ஒரு கூட்டத்தார் கூறி வருகின்றனர். காசுமீரத்துச் சாரங்கதேவர்தான் கருநாடக இசையைப் படைத்தவர் என்பது உண்மையானால் காசுமீரத்திலும், மத்தியப்பிரதேசத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் இன்றுள்ள இசைவாணர்கள் மோகனத்தையும் (முல்லைப்பண்), யதுகுல காம்போதியையும் (செவ்வழி), மத்தியமாவதியையும் (செந்துருத்தி) பாடிக் கொண்டிருக்க வேண்டும். வடபுலத்துப் பரத முனிவர்தாம் பரத நாட்டியத்தைக் கண்டுபிடித்தவர் என்பது உண்மையானால், இன்று பஞ்சாபிலும், பீகாரிலும், வங்காளத்திலும் நாட்டியக் கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருக்க வேண்டும். கருநாடக இசையும்…