இளையராசா இசைத்த பாடல்களை மேடை தோறும் பாட வேண்டுமா? அல்லது அடியோடு புறக்கணிக்க வேண்டுமா? – இலக்குவனார் திருவள்ளுவன்
இளையராசா இசைத்த பாடல்களை மேடை தோறும் பாட வேண்டுமா? அல்லது அடியோடு புறக்கணிக்க வேண்டுமா? இளைஞர்களின் நா இந்திப்பாடல்களை ஒலித்துக் கொண்டிருந்த பொழுது – திரும்பிய பக்கமெல்லாம் இந்தித்திரைப்பாடல்களே கேட்டுக் கொண்டிருந்த பொழுது – ஒட்டு மொத்த தமிழ்உலகையும் தன் இசையின்பால் ஈர்த்தவர் இளையராசா. அதற்காகத் தமிழுலகம் என்றைக்கும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது. இளையராசா , தமிழ்ப்பற்றால் இந்தியிசையை ஓட்டிவிட்டார் என்று கூற முடியாது. இந்தி மெட்டுகளைத் தழுவாமல் தனக்கு எது முடியுமோ அதனைத் தந்தார். அது நாட்டுப்புற இசை. காலங்காலமாக நிலைத்து…