நாணல் நண்பர்கள் குழு ஒருங்கிணைக்கும் 3ஆவது ‘நம்ம வரலாறு’ நிகழ்வு கடந்த ஆனி 1. 2045 / 15.06.2014 ஞாயிறு, மாலை 4.30 மணிக்கு மதுரை பாண்டி முனீசுவரன் கோவிலில் நடந்தது. இம்முறை ‘நம்ம வரலாறு’ நிகழ்வில் “நாட்டார் தெய்வங்கள்” குறித்துஎடுத்துரைக்கபட்டது. நம்ம வரலாறு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு. சா. கான்சா சாதிக்கு, திரு சே.சிரீதர் நெடுஞ்செழியன் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்கள். நாட்டார் தெய்வமான பாண்டி முனீசுவரன் கோவில் இடத்தை நாட்டார் தெய்வங்கள் குறித்து பேசத் தேர்வு செய்ததில் இருந்தே புரிந்து…