நான்தான் கடவுள்! நான்தான் கடவுள்; நான்தான் கடவுள்; நான்தான் பூமியை நடத்தும் கடவுள்! நம்ப மறுக்கும் நண்பர்க ளேஎனைக் கூர்ந்து பார்த்தால் கும்பிடு வீர்கள்! எங்கும் நான்தான் இல்லா திருக்கிறேன்; எங்கும் ஆசையாய் இறைந்து கிடக்கிறேன்; மழையோ வெயிலோ மயக்கும் பொழுதோ மனமொன் றாமல் மரத்துத் திரிகிறேன்; வாழ்வின் மகிழ்வை வசீகர சுகத்தை உணர்ந்து நெகிழ ஒருபொழு தில்லை; வலிகள் என்று வருந்திய தில்லை; நிறைவென நெஞ்சம் நெகிழ்ந்ததும் இல்லை; நான்தான் கடவுள்; நான்தான் கடவுள்; நான்தான் பூமியை நடத்தும் கடவுள்! இசைக்கென உயிரும்…