(தோழர் தியாகு எழுதுகிறார் : சிறை வாழ்க்கை – தொடர்ச்சி) நாம் வந்த பாதை தவறு அப்போதிருந்த மனநிலைப்படி ‘இந்தியப் புரட்சி என்பது சாத்தியம். ஆனால் அதற்கு மொழி தடையாக இருக்கிறது. அதைக் கடப்பதற்கு இன்னமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்ற கருத்தே எனக்கு இருந்தது. இதேபோல் தொடர்ந்து ஐந்தாறு நாட்களுக்கு எங்களுக்குள் கடுமையான விவாதம் நடைபெற்றது. உங்களுடன் கைதான மற்றத் தோழர்கள் இந்த விவாதத்தை எப்படி எதிர்கொண்டார்கள்? அப்போது நக்குசலைட்டு கைதிகள் பலருக்கு ‘இன்னும் சில ஆண்டுகளில் புரட்சி வெற்றிபெற்று விடும்’…