தமிழக வரலாறு 4/5 – மா.இராசமாணிக்கனார்
(தமிழக வரலாறு 3/5 தொடர்ச்சி) தமிழக வரலாறு 4/5 கல்வி நிலை சங்கக் காலத்தில் சாதியற்ற சமுதாயத்தில் எல்லோரும் கல்வி கற்று வந்தனர். குறமக்கள், குயத்தி, பாடினி, வளமனையைக்காத்த காவற் பெண்டு முதலிய பெண்மணிகளும், கொல்லன் முதலிய பலதிறப்பட்ட தொழிலாளர்களும் கவிபாடும் ஆற்றல் பெற்றுவிளங்கினர் என்பது சங்க நூல்களால் அறிகின்றோம். இத்தகைய கல்விநிலை 2000 ஆண்டுகளாக இல்லாமற் போய்விட்டது. பின் நூற்றாண்டுகளில் வடமொழிக் கல்லூரிகள் வளம் பெற்றன என்பதற்குத்தான் சான்றுகள் கிடைக்கின்றனவே தவிர, ஒரு தமிழ்க் கல்லூரியாவது இருந்தது என்பதற்குச் சான்று கிடைக்கவில்லை….
நாயன்மார்கள் – அறுபத்து நால்வர்
-முனைவர். ப. பானுமதி நாயன்மார்கள் அறுபத்து மூவர் என்பது பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் உருவாக்கியுள்ள நெடுங்கணக்கு. அவர்களுள் பெண் நாயன்மார்கள் மூவர். சைவம் தழைக்க உதவிய மகளிர் தொண்டர்கள் என்று காரைக்காலமையார், இசை ஞானியார், மங்கையர்க்கரசியார் ஆகிய மூவரைச் சுட்டுகிறது பெரிய புராணம். நாயன்மார்களின் பட்டியலில் பெண் நாயன்மார்கள் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர். பெரிய புராணத்தில் சுந்தரரை ஈன்றெடுத்த அளவில் இசைஞானியாரின் பெருமை ஒர் பாடலில் (1282) பாடி முடிந்துள்ளது,. மங்கையர்க்கரசியாரின் பெருமை பாண்டிய மன்னன் நின்ற…