ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.   திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகாடு மலை அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் உள்ள பச்சைமலை அடிவாரத்தில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையில் குழுவினர் ஆறுமுகம், பெருமாள், மனோசு குமார் ஆய்வு மேற்கொண்டனர்  அப்போது, கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள், ஆயுதங்கள், பானைகள், ஓடுகள் என மொத்தம் 64 கற்காலக் கருவிகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. இது குறித்து, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி…