பல்துறைப் புலவர் பரிமேலழகரின் ஆரியத் திணிப்புகள் – இரா.நெடுஞ்செழியன்
பல்துறைப் புலவர் பரிமேலழகரின் ஆரியத் திணிப்புகள் என்றாலும், மதியின் கண் மறு இருப்பது போல, பரிமேலழகரின் வடமொழி நூலாரின் கொள்கைப் பற்றும், வைணவச் சமயம் பற்றும், வருணாச்சிரம சனாதன தருமப் பற்றும் சார்ந்த கருத்துகள், வள்ளுவர் வற்புறுத்திய சான்றோர் மரபுகளுக்கும் பொது அறத்திற்கும் முரண்பாடான முறையில், அவரால், உரையின் சிற்சில பகுதிகளில், வேண்டுமென்றே திணிக்கப்பட்டிருக்கின்ற என்பது மட்டும் உண்மை. மேற்கண்ட காரணம் பற்றித்தான் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தம்(பிள்ளை) அவர்கள், “வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர‘ வேண்டும் என்று வலியுறுத்தினார்: அவர்…
பரிமேலழகரின் உரைப்பாங்கு தனிச் சிறப்புடையது! – இரா.நெடுஞ்செழியன்
பரிமேலழகரின் உரைப்பாங்கு தனிச் சிறப்புடையது பரிமேலழகர் தமிழ்மொழியின் இலக்கிய இலக்கண நூல்களையும், வடமொழியின் இலக்கிய இலக்கண நூல்களையும் ஐயந்திரிபு அறமுற்றும் தெளிவுறக் கற்றறிந்தவர் என்பதை, அவரது உரையின் வளத்தால் நன்கு அறிந்து கொள்ளலாம். அவர், தமது உரையில் 230க்கும் மேற்பட்ட இலக்கிய இலக்கணச் செய்யுள்களை மேற்கோள்களாகக் காட்டுகிறார் என்றால், அவரது தமிழ் இலக்கிய இலக்கணப் புலமை, தெளிவாக உணரப்படும். ஒவ்வொரு குறளுரையிலும் அவர், இலக்கண அமைதியைச் செம்மையுக் கூறிச் செல்லும் பாங்கு தனிச் சிறப்புடையதாகும். – நாவலர் இரா.நெடுஞ்செழியன்: திருக்குறள் தெளிவுரை: முன்னுரை