பாடலாசிரியர் நா.முத்துக்குமார் திடீர் மரணம்
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் திடீர் மரணம் தமிழ்த் திரைவானில் புகழ்மிகுப்பாடலாசிரியராக ஒளிவிட்டவர் கவிஞர் நா.முத்துக்குமார்(அகவை 41), மஞ்சள்காமாலையால் தாக்குண்டு பண்டுவம் பயனளிக்காமல் இன்று காலமானார். இவர், காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975-ஆம் ஆண்டு பிறந்தார். இயக்குநராகப் பணியாற்ற விரும்பிய நா.முத்துக்குமார் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். சீமான் இயக்கத்தில் வெளிவந்த ‘வீரநடை’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். அதன்பிறகு, பாடல்கள் எழுவதில் ஆர்வம் ஏற்பட்டு, இதுவரை 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு, முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்….