‘எதிரும் புதிரும்’: வெள்ள அரசியல் குறித்து இலக்குவனார் திருவள்ளுவன்

  விண் தொலைக்காட்சி ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் வெள்ள அரசியல் குறித்த கலந்துரையாடலில் இலக்குவனார் திருவள்ளுவன் விண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் கார்த்திகை 26, 2046 / திசம்பர் 12, 2015 சனியன்று இரவு 7.00 மணிக்கு வெள்ள அரசியல் குறித்த கலந்துரையாடலில் நான் பங்கேற்கிறேன் மறு ஒளிபரப்பு அன்று யாமம் 1.00 மணி. http://wintvindia.com இணையத் தளத்திலும் காணலாம். வாய்ப்புள்ளவர்கள் காண்க. வெள்ளத்தில் மீண்டவர்கள் கருத்து வெள்ளத்தில் மூழ்கலாம்.   அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

விண் தொலைக்காட்சி எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் இலக்குவனார் திருவள்ளுவன்

விண் தொலைக்காட்சியில் கார்த்திகை 12, 2046 / நவம்பர் 28, 2015 சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன்.   இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய அரசியல் யாப்பு, அம்பேத்கார்,நேரு குறித்து நடைபெறும் வாதுரை தொடர்பான வாதுரையாக இந்நிகழ்வு அமையும்.   மறு ஒளிபரப்பு இன்று யாமம் 1.00 மணி. http://wintvindia.com இணையத் தளத்திலும் காணலாம்.   வாய்ப்புள்ளவர்கள் காண்க.   அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

இனப்படுகொலைக்கு எதிரான தமிழகத் தீர்மானமும் இந்திய நிலைப்பாடும் – நான் பங்கேற்கும் உரையாடல்

  அன்புடையீர், வணக்கம். ஆவணி 30, 2046 / செப்.16, 2015 புதன் கிழமை இரவு 7.00 மணிக்கு விண் தொலைக்காட்சி – WIN TV [எழுத்தாளர், தொகுப்பாளர், செவ்வியாளர் நிசந்தன் வழங்கும்] ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில்   இனப்படுகொலைக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானம், இந்திய நிலைப்பாடு, அமெரிக்க நிலைப்பாடு இந்திய நிலைப்பாடு தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று ஈழத்தமிழர்க்கு உரிய நீதி வழங்க வேண்டி வலியுறுத்த உள்ளேன். மறு ஒளிபரப்பு செப்.17 இரவு – அஃதாவது செப். 18 வைகறை 1.00 மணி….

விண் தொலைக்காட்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கிறேன்

ஆவணி 25, 2046 / செப்.11, 2015 வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு விண் தொலைக்காட்சி – WIN TV ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்று இந்திக்கு எதிரான குத்துகளைப் பதிய இருக்கிறேன்   http://wintvindia.com/   இணையத் தளத்திலும் காணலாம். மறு ஒளிபரப்பு செப்.11 இரவு – அஃதாவது செப்.12 வைகறை 1.00 மணி.   வாய்ப்புள்ளவர்கள் காண்க.   அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

தமிழகத்திற்கு இராகுல் வருகையும் மானக்கேடர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்

  தமிழகத்திற்கு இராகுல் வருகையும் மானக்கேடர்களும்   நேற்று(ஆடி 09, 2046 / சூலை 25,2015 சனிக்கிழமை இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை) வாகைத்தொலைக்காட்சியாகிய ‘வின் டிவி’ என்னும் தொலைக்காட்சியில் எழுத்தாளர், தொகுப்பாளர், செவ்வியாளர் நிசந்தன் வழங்கும் ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். இதில், இராகுல் திருச்சிராப்பள்ளி வருகையின்பொழுது பேசிய மதுவிலக்கு தொடர்பான அரசியல் உரையாடல் நிகழ்ந்தது. இவற்றுள் மதுவிலக்கு நினைவுகள்பற்றித் தனியாகவும், மதுவிலக்குக் கொள்கைபற்றித் தனியாகவும் எழுத உள்ளேன். இராகுல் வருகைபற்றி மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்….

செயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் – 2013

மறைந்த எழுத்தாளர் செயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வோர் ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து ‘செயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’ வழங்கி வருகிறது. 2013ஆம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த புதின விருது :  நிசந்தன் எழுதிய ‘என் பெயர்’, ஏக்நாத்து எழுதிய ‘கெடை காடு’ ஆகியவையும் சிறந்த நாடக நூலுக்கான விருது : க. செல்வராசின் ‘நரிக்கொம்பு’ சிறந்த சிறுகதைகள் விருது: புதிய மாதவி எழுதிய ‘பெண் வழிபாடு’ செயந்தி சங்கர் எழுதிய ‘செயந்தி சங்கர் சிறுகதைகள்’ சிறந்த கவிதை…

தமிழ்க்கட்டாயக்கல்வி குறித்த வாகை(வின்) தொலைக்காட்சி காணுரை இணைப்பு

தமிழே கல்வி மொழியாக, வாகை (வின்) தொலைக்காட்சியின் கருத்தாக்கப் பணி! தமிழ்நாட்டில் அனைவரும் தமிழ் பயில வேண்டும் என்பதற்காகப் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர், 2006 ஆம் ஆண்டு முதல்வகுப்பிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் அடுத்தடுத்த வகுப்பு என்ற முறையில் தமிழ்மொழிப்பாடம் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்பெற்ற சட்டப்படியான செயல்பாடு இது. இதற்கிணங்க இவ்வாண்டு 9 ஆம் வகுப்பு பயில்பவர்கள் தமிழைப் பயில்வார்கள். அடுத்து 10 ஆம் வகுப்பு பயிலும் பொழுது, இவற்றின் தொடர்ச்சியாகத் தமிழைப் பயில்வார்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதல்…