எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத நிதிநிலை அறிக்கை – வைகோ
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத நிதிநிலை அறிக்கை (Budget) ! – வைகோ “நடுவண் அரசின் பொது நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை” என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நடுவண் நிதி அமைச்சர் அருண் செத்லி அளித்துள்ள 2016-17ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையில் கடந்த இரண்டு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தவைதாம் இடம் பெற்றுள்ளன. புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. பொருளியல் (economical) வளர்ச்சி 8.6 விழுக்காடு(%) இருக்கும் என்று போன ஆண்டு கணித்தது…
நிதி நிலைஅறிக்கை – 2016: விலை உயர்வு – குறைவுப் பட்டியல்
நிதி நிலை அறிக்கை – 2016: விலை உயர்வு – குறைவுப் பட்டியல் தலைமையமைச்சர் நரேந்திர மோதி தலைமையிலான நடுவண் பா.ச.க அரசின் 2016-2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கையினை (Budjet) மாசி 17, 2047 / பிப்பிரவரி 29, 2016 அன்று நாடாளுமன்றத்தில் நடுவண் நிதியமைச்சர் அருண் செத்லி அளித்தார். இதனால் வரி போடுவதில் மேற்கொண்டுள்ள மாற்றத்தின் எதிரொலியாக விலை உயர்கிற குறைகிற பொருட்கள், சேவைகள் போன்றவற்றின் பட்டியலைப் பார்ப்போம். விலை உயர்வு பெறுபவற்றின் பட்டியல்: – விளையாட்டுக்காகப் பயன்படுத்தும் (sport utility) ஊர்திகள்….
பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு
பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் மரு.இராமதாசு 10.02.14 திங்கள்கிழமையன்று வெளியிட்டார். தமிழகச் சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை அளிக்கப்படுவதற்கு முன்பு பாமக சார்பில் நிழல் நிதிநிலை அறிக்கை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளன. கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி, கட்டணமில்லாக் கல்வி, தரமான கல்வி,மகிழ்வான சுமையற்ற கல்வி, விளையாட்டுடன் கூடிய கல்வி வழங்கப்படும். * தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பிற கல்விஇயக்கங்களின் பாடத்…