பொதுத் தேர்வும் (நீட்/NEET)இளந்தளிர் அனிதாவின் இழப்பும் – அமெரிக்கத் தமிழர்களின் கண்ணோட்டம்

பொதுத் தேர்வும் (நீட்/NEET) இளந்தளிர் அனிதாவின் இழப்பும் – அமெரிக்கத் தமிழர்களின் கண்ணோட்டம்     அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூர் எனும் சிற்றூரில் கூலித் தொழிலாளியான திரு.சண்முகம் அவர்களின் குழந்தை அனிதா ‘நீட் (NEET)’ எனப்படும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வினால் தனது வாழ்நாள் கனவான மருத்துவக் கல்வியை இழந்தார். முறையான மருத்துவச் சேவை கிடைக்காததால் தனது சிறு வயதிலேயே தாயை இழந்தார் மாணவி அனிதா. இப்பேரிழப்பு தந்த வலியால், தான் மருத்துவராகி தனது சிற்றூர் மக்களுக்கு உதவ வேண்டுமென்ற உயரிய குறிக்கோளுடன் தன்…

வா.செ.குழந்தைசாமி நினைவஞ்சலிக் கூட்டம், சென்னை

மார்கழி 13, 2047  புதன்கிழமை  28, திசம்பர் 2016 மாலை 4.00 மணி   அண்ணா  பல்கலை வளாகம், சென்னை பேரா. முனைவர். வா.செ.குழந்தைசாமி  நினைவஞ்சலிக் கூட்டம் சி.ஆனந்தன், கணித்தமிழ்ச்சங்கம் கிண்டி  பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் அறிவியல் கழகம் (குறிப்பு: அழைப்பிதழில் தட்டச்சுப்பிழையாக மார்கழி 15 என இடம் பெற்றுவிட்டது. மார்கழி 13 எனத் திருத்திப் படிக்க வேண்டுகின்றோம்.)

எழுத்தாளர் சார்வாகன் முதலாமாண்டு நினைவஞ்சலி

எழுத்தாளர் சார்வாகன் முதலாமாண்டு நினைவஞ்சலி   மார்கழி 10, 2047 /   ஞாயிறு    25-12-2016 காலை 10.30   எழுத்தாளர்  சாரு நிவேதிதா, எழுத்தாளர் குப்புசாமி, சார்வாகனின்  உடன்பிறப்பு மரு.இராசன் அரிகரன் பேசுகிறார்கள் பரிசல் புத்தக நிலையம் இராமகிருட்டிணா மடம் சாலை, மயிலாப்பூர்     (பெ.சு.பதினிலைப்பள்ளி எதிரில்)

உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!   இந்திய நாட்டின் விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கேற்று, வெள்ளையனுக்கு எதிராகக் கப்பல் ஓட்டி, வெள்ளையனின் பொருளாதார அடி மடியை அசைத்த தமிழன் செக்கிழுத்த செம்மல் நமது பெரும் பாட்டன் வ.உ.சிதம்பரம்(பிள்ளை). அவரின் நினைவு நாளை உலகத் தமிழர் பேரவை தமிழகத்தின் நான்குமுதன்மை நகரங்களிலும், ஈழத்தின் முல்லைத் தீவிலும் கடந்த கார்த்திகை 03, 2047 /  18-11-2016 வெள்ளி அன்று  வெகு சிறப்பாகநடத்தியது. கோவை :  கோவை மத்திய சிறைச்சாலை…

மாமனிதர் இரா.நாகலிங்கம் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

    மாமனிதர் இரா.நாகலிங்கம் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவேந்தல் செருமனியில் வரும் பங்குனி 14, 2047 – 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நான்கு மணிக்கு  நடைபெற உள்ளது. தரவு:  

மிளிரின் இராசம் கிருட்டிணன் நினைவஞ்சலி

அகநாழிகை, சென்னை  ஐப்பசி 29, 2045 / நவ.15,2014 மிளிர் இலக்கிய அமைப்பு நடத்தும்  எழுத்தாளர் இராசம் கிருட்டிணன் நினைவஞ்சலிக் கூட்டம் வரவேற்புரை: நாச்சியாள் முன்னிலை: திரு. செயகுமார் நினைவுகூர்வோர் : எழுத்தாளர் திருப்பூர் கிருட்டிணன் எழுத்தாளர்  சோடி குரூசு பேரா. பாரதி சந்துரு நன்றியுரை: கவிஞர். பரமேசுவரி இடம்: அகநாழிகை புத்தக உலகம் நேரம்:   ஐப்பசி 29, 2045 15-11-2014 மாலை 5.30 மணி

திருவாட்டி இராமச்சந்திரன் படத்திறப்பு விழா

  பகுத்தறிவு அரிமா சிவகங்கை இராமச்சந்திரனாரின் மருமகளும், பொறியாளர் இராமச்சந்திரனாரின் மனைவியுமான திருவாட்டி புட்பராசாமணி அம்மையாரின் படத்திறப்பு இன்று (15.12.13)காலை, சென்னை திருவாவடுதுறை இராசரத்தினம் கலையரங்கத்தில் நடைபெற்றது. இருப்பூர்திக்காவல் கண்காணிப்பாளர் கயல்விழி இ.கா.ப. அவர்கள் அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்தார்கள். திருவாளர்கள் கற்பூர சுந்தரபாண்டியன் இ.ஆ.ப.(நி), மரு.கருணாகரன், கொடைக்கானல் காந்தி, இலக்குவனார் திருவள்ளுவன், தி.க.சட்டத்துறைச்செயலர் இன்பலாதன், அரப்பா, அ.செல்வக்குமார், கலைச்செல்வன், முனைவர் ஐயாதுரை, சுந்தரராசன்,சங்காமிருதம் குருசாமி, மரு.இராமகிருட்டிணன் முதலானோர் நினைவுரை ஆற்றினர். திருவாட்டி மலர் வரவேற்புரையும் திருவாட்டி எழிலரசி நன்றியுரையும் ஆற்றினர். வழக்குரைஞர் இரா.நீதிச்செல்வன்,…