கலைஞர் என்றும் கதிராய் ஒளிர்வார் !– பழ.தமிழாளன்
கலைஞர் என்றும் கதிராய் ஒளிர்வார் ! 1. திருக்குவளை எனுமூரில் அஞ்சுகத்தாய் முத்துவேலர் அன்பால் ஒன்றி ஆற்றலுருக் கொண்டாரை அருமைந் தாய்க் கலைஞரையே ஈன்றெடுத்தார் திருவாகும் கல்வியினைத் தேடுகையில் செந்தமிழிற் பற்றுக் கொண்டும் ஈரோட்டுப் பெரியாரின் ஈடில்லாப் பகுத்தறிவின் ஊற்றங் கொண்டும் பெருமைமிகு அண்ணாவின் பீடுநிறை உணர்வதனைப் பெற்றுக் கொண்டும் பைந்தமிழ நாடதனில் பாங்குறவே ஐந்துமுறை முதல்வ ராகி இருளடிமைத் தீவீழ்ந்த இனமதனை எழுகதிராய் எழவும் வைத்தோர் ஈடிணையும் இல்லாதே …
மறவாதே! 21.04.2019 பாவேந்தர் நினைவு நாள்!
மறவாதே! 21.04.2019 பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்! “பண்பட்ட ஞானம் பகுத்தறிவாம்! அவ்வழியில் மண்ணின் மாத்தமிழர் மாண்புறுக! – விண்வரை பெண்ணினமும் ஆணினமும் பேணுங் கருத்தொன்றித் தண்ணிழல்போல் வாழ்க தழைத்து“ எனவுரைக்கும் பாவேந்தர் இன்றமிழ்ப் பாச்சொல் நனவாக்கிப் பண்பாட்டை நாடு! – இனம்மொழி மண்ணுரிமை போற்று! மறவாதே! நல்லொழுக்கம் கண்ணெனக் காத்துயர்வைக் காண்! – மணிமேகலை குப்புசாமி
இலக்குவனார் – மயிலாடன்
ஒற்றைப்பத்தி இலக்குவனார் தமிழ்ப் போராளி பேராசிரியர் சி.இலக்குவனாரின் உரை ஆரவாரமாக இருக்காது – ஆற்றொழுக்காக – அமைதி யாக – அதேநேரத்தில் ஆழமாக இருக்கும். அதில் தமிழ் மானமும், இனமானமும் போட்டிப் போட்டுக்கொண்டு துள்ளும். இரண்டாண்டு, மூன்றாண்டுக்குமேல் ஒரே இடத்தில் அவர் பணியாற்றியது கிடையாது – அதற்குக் காரணம் அவரது மொழி, இன, திராவிட இயக்கக் கொள்கைச் சித்தாந்தமும், அவற்றின் வெளிப்பாடுமே! மரம் சும்மா இருந்தாலும், காற்று அதைச் சும்மா இருக்க விடாது அல்லவா! அதேபோல, நாட்டு நடப்புகளும், போக்குகளும் அந்தத் தமிழ்…
தமிழ்ப்போராளி இலக்குவனார், கி.வீரமணி
தமிழ்ப்போராளி இலக்குவனார் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் நன்றி: தினத்தந்தி: 02.09.2018 தமிழ்ப் போராளி இலக்குவனார் நாளை (செப்டம்பர் 3-ந்தேதி) இலக்குவனார் நினைவு நாள். பதிவு: செட்டம்பர் 02, 2018 10:20 மு.ப. பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழறிஞர்கள் வரிசையில் தனித்தன்மையானவர். தான் படித்த படிப்பு, சம்பாத்தியம் குடும்ப வளமைக்கு மட்டுமே என்னும் கண்ணோட்டம் அவருக்கு இருந்திருந்தால் அவர் வாழ்க்கை என்பது இவ்வளவுத் தொடர் தொல்லைகளுக்கும், அலைச்சலுக்கும் ஆளாகி இருக்காது. இலக்குவனார், தஞ்சாவூர் மாவட்டம் வாய் மேடு என்னும் சிற்றூரில் சிங்காரவேலர்-இரத்தினம் அம்மையார் ஆகியோரை…
பெரியார் 43-ஆவது நினைவு நாள் – பல்வழி அழைப்புக் கூட்டம்
பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா பெரியார் 43-ஆவது நினைவு நாள் பல்வழி அழைப்புக் கூட்டம் பேரா.சுப.வீரபாண்டியன்: பெரியாரும் இன்றைய தமிழகமும் மார்கழி 08, 2047 / திசம்பர் 23, 2016 அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8.00 முதல் 9.00 வரை அழைப்பு எண் (712)4321500 குறி: 951521# தரவு: சோம.இளங்கோவன்