“தமிழ்த் தேசியப் பேரியக்கம்” – தீர்மானங்கள் (தொடர்ச்சி) – ஙு
(புரட்டாசி 5, 2045 / 21 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி) தீர்மானம் – 7: தமிழ்நாட்டை கதிர்வீச்சு நோயாளியாக, வேதியக் குப்பை மேடாக மாற்றாதே! இந்திய அரசு, தனது பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை ஆதாயத்திற்காகவும் தனது ஆதாயங்களுக்காகவும் மனித குல அழிவுத் தொழில்நுட்பமான அணுப்பிளப்புத் தொழிற்சாலைகளை மேலும் மேலும் தமிழ்நாட்டில் நிறுவி வருகிறது. மற்ற மாநிலங்கள் மறுத்துவிட்ட நிலையில், தமிழகக் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் கட்டியது. அணுக்கதிர் வீச்சினால் உலகின் பல பகுதிகளில் மனிதப் பேரழிவு நேர்ந்ததை அறிந்து…