நியூயார்க்குத் தமிழ்ச் சங்கத் தமிழர் திருநாள்
நியூயார்க்குத் தமிழ்ச் சங்கம் 2014 ஆண்டிற்கான தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சனவரி 25 அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. விழாவிற்கு வந்திருந்தவர்களைச் சங்கச் செயலர் தேவராசு விசயகுமார் பொங்கல் பண்டிகையின் சிறப்புகளைக் கூறி வரவேற்றார். விழாவில் நான்கு அகவைச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையான இசை, நடனம், ஆட்டம் பாட்டம் முதலியவற்றைப் படைத்து அரங்கத்தில் இருந்த ஏறத்தாழ 400 பேர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்தனர். குறிப்பாகச் “செம்மொழியான தமிழ் மொழியாம்” என்ற பாடலுக்கு ஆடிய சிறார்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக…