இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 28
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 27 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 28 அளவுப் பெயரும், நிறைப் பெயரும், எண்ணுப் பெயரும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழில் இருந்துள்ளன. பனை என்னும் சொல் அளவுப் பெயராகவும், கா என்னும் சொல் நிறைப்பெயராகவும் வழங்கியுள்ளன. யாவர் என்னும் சொல் யார் என்றும், யாது என்னும் சொல் யாவது என்றும் மருவி வருவது தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே உள்ள வழக்காகும். அழன், புழன் என்ற இரு சொற்கள் தொல்காப்பியர் காலத்தில் வழக்கிலிருந்தன; பின்னர் மறைந்துவிட்டன. பல,…