தமிழருக்(கு) அரணாய் நின்றான் வாழியவே!
ஈழப் புலிமகன் வீரத் தலைமகன் எறிகணை தொடுத்தான்! ஆழிப்பேரலை போலச் சினமுடன் அடியாய் அடியடித்தான்! அடிமை இல்லாத தமிழீழம் படைக்க நினைத்தான்! அனைவரும் சமமாய் வாழ்ந்திட ஒன்றாய் இணைத்தான்! தரைப்படை கடற்படை வான்படை கட்டி அமைத்தான்! மில்லர் தற்கொடைப் படையால் எதிரிகள் முற்றுகை தகர்த்தான்! அறநெறியோடு போர்முறை காத்து வென்றான் – வைய அரங்கில் இவனே தமிழருக்(கு) அரணாய் நின்றான்! தமிழாய் நெருப்பாய்த் தலைவன் பிறந்தே வந்தான் – புதுத் தமிழீழ அரசு ஒன்றைப் பொதுவாய்த் தந்தான்! அடுப்பில் கிடந்த பெண்ணைப் புலியாய்ப் படைத்தான் – பெண் அடிமை…
தன்னைத் தமிழர் வாழ்வாய் ஆக்கிய தலைவா நீ வாழ்க!
கங்கை கடாரம் காழகம் ஈழம் கண்டு வென்றவனே! எங்கள் மண்ணில் கரிகால்வளவனாய் இன்று பிறந்தவனே! தங்கத்தமிழர் விடுதலைக்காகத் தன்னைத் தந்தவனே! சிங்களப் படையைப் பொடிப் பொடியாக்கிய செம்மலே நீ வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! – நீ வாழ்க! வாழ்க! வாழ்க! மண்ணும் மொழியும் இனமும் காக்கும் மறவன் நீ அன்றோ! விண்ணும் மழையைத் தூவி உன்னை வாழ்த்தும் நாள் இன்றோ! எண்ணும் செயலை முடிக்கும் அறிவின் ஏற்றம் நீயன்றோ! வண்ணத் தமிழர் வாழ்வின் சுடரே! வாழ்க நீ நன்றே! (கங்கை…