திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 034. நிலையாமை
(அதிகாரம் 033. கொல்லாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.துறவற இயல் அதிகாரம் 034. நிலையாமை ‘வாழ்வும், செல்வமும், நிரந்தரம் அல்ல’என ஆராய்ந்தும் உணர்தல். நில்லாத வற்றை, “நிலையின” என்(று),உணரும் புல்அறி(வு) ஆண்மை கடை. நிலைக்காத அவற்றை, ”நிலைக்கும்”என உணரும் அறிவு, கீழ்அறிவு. கூத்தாட்(டு) அவைக்குழாத்(து) அற்றே, பெரும்செல்வம் போக்கும், அதுவிளிந்(து) அற்று. நாடகத்தைப் பார்க்க வருவார், போவார்போல், செல்வமும் வரும்;போம். அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்,…