பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு
பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் மரு.இராமதாசு 10.02.14 திங்கள்கிழமையன்று வெளியிட்டார். தமிழகச் சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை அளிக்கப்படுவதற்கு முன்பு பாமக சார்பில் நிழல் நிதிநிலை அறிக்கை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளன. கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி, கட்டணமில்லாக் கல்வி, தரமான கல்வி,மகிழ்வான சுமையற்ற கல்வி, விளையாட்டுடன் கூடிய கல்வி வழங்கப்படும். * தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பிற கல்விஇயக்கங்களின் பாடத்…