சேரனின் கூற்றும் தவறு! மழுப்பலும் தவறு! இருப்பினும் மன்னிப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
சேரனின் கூற்றும் தவறு! மழுப்பலும் தவறு! இருப்பினும் மன்னிப்போம்! இயக்குநர், நடிகர், படஆக்குநர் என்ற முறையில் சேரன் மக்களால் நேசிக்கப்பெறும் கலைஞர்; தம் படங்களுக்கு மூன்று தேசிய விருதுகள் பெற்றவர் என்ற முறையில் அரசாலும் போற்றப்படுபவர்; ஈழத்தமிழர் நலன் சார்ந்த உரை யாற்றி உலகெங்கும் பரவியுள்ள ஈழத்தமிழர்களின் பரிவிற்கும் பாத்திரமானவர். தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். (திருவள்ளுவர், திருக்குறள் 104) நமக்குப் பிறர் செய்யும் உதவி மிகச்சிறிய தினை அளவாக இருப்பினும் அதனை நாம் மிகப்பெரிய பனை அளவாகக்…