வேண்டாமே … நமக்கு நவோதயா பள்ளிகள் – சுசிலா
வேண்டாமே … நமக்கு நவோதயா பள்ளிகள் பொதுத் தேர்வாகிய ‘நீட்’ எனும் அரக்கனைத் தொடர்ந்து, நம்மை நோக்கி குறி வைக்கப்படும் அடுத்த அம்பு நவோதயா பள்ளிகள். இது நம் தமிழ்மொழிக்கும், குமுகநீதிக்கும் பெருங்கண்டத்தை – பேராபத்தை விளைவிக்கக் கூடியது. இதனை முளையிலேயே கிள்ளி எறியவில்லை என்றால், நம் தமிழ்ச்சமூகத்தை மிகவும் கல்வி மறுக்கப்பட்ட பின்தங்கிய நிலைக்குக் கொண்டு சென்று விடும். மத்திய பா.ச.க அரசு தொடர்ந்து நம்மை போராட்டக்களத்திலேயே வைத்திருக்க முடிவு செய்திருக்கிறது போலும்.! இந்த நவோதயா பள்ளிகளைப்பற்றி சற்று விரிவாக பார்ப்போமா….