கடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும்  பகுத்தறிவுச் செம்மல் சிவகங்கை இராமச்சந்தரனாரின் மூத்த மகன் இரா.இராமசுப்பிரமணியம். தமிழ்நாடு அரசுப்பணியார் தேர்வாணையத் தலைவராகவும் அதற்கு முன்னர் அரசின் சட்டத்துறைச் செயலராகவும் இருந்தார். இவர் 55 ஆண்டுகளுக்கு முன் கடலூரில் சார் நீதிபதியாக இருந்தார். அப்பொழுது ஒரு நாள் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி கடலூருக்கு வந்து சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ளார் என்று கேள்விப்பட்டார். உடனே அவரைச் சந்தித்து வணங்கி உரையாடி விட்டு வந்தார். உடனே ஆளுங்கட்சியினரால், அரசிற்கு இது தெரிவிக்கப்பட்டது. அரசு…