நக்கீரன் இதழினர் மீதான வழக்கு, ஊடகத்தை அடக்கும் உச்சக்கட்டம் – இலக்குவனார் திருவள்ளுவன்
நக்கீரன் இதழினர் மீதான வழக்கு, ஊடகத்தை அடக்கும் உச்சக்கட்டம் ஆளுநர் மாளிகை தேன்கூட்டில் மீது கை வைத்தபின்பும் தன்னை மாற்றிக் கொள்ள வில்லை. ஊடகத்தில் நடவடிக்கை எடுப்பதற்குரிய செய்தி வந்தது எனில் எழுதிய செய்தியாளர், செய்தி ஆசிரியர், வெளியீட்டாளர், செய்தி வெளியீட்டில் தொடர்புடைய பிறர் ஆகியோர் மீது வழக்கு தொடுப்பது வழக்கம். ஆனால், அடிநிலை ஊழியர்கள் வரை வழக்கு தொடுப்பது முதன்முறைக் கொடுஞ்செயலாகும். இதழ்களில் பல் வேறு பிரிவுகள் இருப்பதை அறிவோம். அந்தந்தப் பிரிவினருக்கு அந்தந்தப்பிரிவில் உள்ள வேலைகளை உரிய…