மும்பையில்,  1  உரூபாய்க்கு 1  புதுப்படி(இலிட்டர்) நீர் தரும்   எந்நரேமும் இயங்கும் நீர்ப்பொறியை வந்தனா நிறுவனம் (Vandana Foundation) என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மன்கார்டு என்ற இடத்தில், இதனை அமைத்துள்ளது. இதில்,கட்டண அட்டை மூலம் தண்ணீர்  பெறலாம்.. சொகுசுப் பேருந்துகளில்  வேகக் கட்டுப்பாட்டிற்காகவும் பிற தகவல்களுக்காவும் கருப்புப் பெட்டி அறிமுகப்படுத்தப்படுகிறது; பயணிகள் இடுப்புவார் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. பயன்பாட்டிலுள்ள பேருந்துகளில் இவற்றை அறிமுகப்படுத்த சட்டம் கொணருவதுடன், புதிய பேருந்துகள் இவற்றுடன்தான்  விற்கப்பட வேண்டும் என்று நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது….