நிகழ்பதிவித் தகவலால் நீர்ப்பூசுணை(தர்ப்பூசணி) விற்பனை மந்தம் தேவதானப்பட்டி பகுதியில் கோடைக் காலம் தொடங்கியவுடன் கம்பங்கூழ், இளநீர், மோர், நீர்ப்பூசுணை, நுங்கு போன்றவற்றை வாங்கிக் கோடைக்காலத்தைத் தாங்கத் தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் நிகழ்பதிவி(WhatsApp) மூலம் நீர்ப்பூசுணையில் கலப்படம் என்று வந்த செய்தியை அடுத்து இப்பொழுது நீர்ப்பூசுணை வாங்குவதைப் பொதுமக்கள் தவிர்த்து வருகிறார்கள். நீர்ப்பூசுணையில் எரித்ரோசின் பி எனும் சிவப்பு நிறமியை ஊசி வழியாக உட்செலுத்துவதன் மூலம் அதன் நிறம் மாறுகிறது. இதனை உண்பவர்களுக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. என்பதுதான் அந்தத் தகவல். வணிகர்கள் சிலர், நீர்ப்பூசுணைப்…