தேவதானப்பட்டி பகுதியில் மழை ஏமாற்றியதால் மஞ்சளாறு அணை நீர்மட்டம் குறையத்துவங்கியுள்ளது.   கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மேற்குமலைத்தொடர்ச்சியில் தொடர்ச்சியாகக் கனமழை பொழிந்தது. இதனால் தலையாறு, வறட்டாறு, மூலையாறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் நீர் வரத்து அதிகமானது. இதனையொட்டி வறண்டு காணப்பட்ட எலிவால் அருவியில் தண்ணீர் வரத்து தொடங்கியது. இதனால் இருபது அடிக்குக் கீழ் இருந்த மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் மளமளவென 40 அடியாக உயர்ந்தது.   இந்நிலையில் கடந்த சில நாட்களாகச் சாரல்மழை பெய்தது. அப்போது மேகங்கள் திரண்டு இருந்தாலும் காற்று…