குளங்களின் பாதுகாப்பை உணர்த்தும் ‘நடுகல் சிலை’
குளங்களின் பாதுகாப்பை உணர்த்தும் ‘நடுகல் சிலை‘ நீர் நிலைகளைப் பாதுகாத்தவர்களுக்கு, நடுகல் சிலை வைத்து அவர்களை வழிபாட்டுக்கு உரியவர்களாக மாற்றி முன்னோர்கள் முதன்மை அளித்துள்ளனர். மன்னர்கள், பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில், பயிர் நிலங்களின் பரப்பை அதிகரிக்க, குளங்கள், தடுப்பணைகள் உருவாக்குவது முதன்மைப் பணியாக இருந்துள்ளது. நீர் நிலைகளைப் பாதுகாக்க, அவர்கள் அளித்த முதன்மை, நீர் வழித்தடங்களையும் நீர் நிலைகளையும் அழித்து விட்டு, வறட்சியில் வாடிக்கொண்டிருக்கும் நமக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. மேடான தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிக்கு, வாய்க்கால் வெட்டித் தண்ணீர் கொண்டு வந்து,…
“களவு போகும் நம் மண்ணும் மனிதமும் ” – சூழலியல் கருத்தரங்கம்
புரட்டாசி 10, 2046/ செப்.27, 2015 மாலை 5.30 மேற்குத் தாம்பரம் “களவு போகும் நம் மண்ணும் மனிதமும் ” – சூழலியல் கருத்தரங்கம் இன்று தொடர்ச்சியாகச் சுரண்டப்பட்டு வரும் இயற்கை வளங்கள் குறித்து நாம் அறிந்தும் கவனம் செலுத்தாமலே இருக்கின்றோம். நாம், நமது அருகில் அன்றாடம் மணல் கொள்ளையால் சுரண்டப்பட்டும், வன்கவர்வுகளால், கொட்டப்படும் கழிவுகளால் மாசுபட்டும் வருகின்ற நீர் நிலைகளைப்பற்றிக் கவனத்தில் கொள்ள மறுக்கின்றோம். பணம் இருந்தால்தான் தண்ணீர்!, அதுவும் தூய்மையான நீரைப் பெற இயலாத நிலை! தொடர்ச்சியாகக் குறைந்துகொண்டு வரும்…
தேனிப் பகுதியில் மீன்வளர்ப்பிற்காக நள்ளிரவில் குளத்தைத் திறந்துவிடும் அவலம்
தேனிப் பகுதியில் ஏராளமான கண்மாய்கள் உள்ளன. அவற்றில் இயற்கையாகப் பெய்த மழையாலும் மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை போன்றவை திறக்கப்பட்டமையாலும் குளங்கள் நிரம்பி வருகின்றன. இப்போது ஒவ்வோர் ஊராட்சியிலும் குளங்களில் மீன்குஞ்சுகளை விட்டு வளர்த்து வருகின்றனர். மீன்கள் வெளியே சென்றுவிடாமல் தடுக்க இரவு பகலாகக் குளங்களில் காவல் காத்து வருகின்றனர். இந்நிலையில் குளம் முற்றிலும் நிரம்பிய பிறகுதான் உழவிற்குத் தண்ணீர் திறந்துவிடவேண்டும். ஆனால் சில ஊராட்சித்தலைவர்கள் தங்கள் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, இரவோடு இரவாக மீன் வளர்ப்பதற்காகக் குளங்களைத் திறந்துவிடுகின்றனர்….
திருவள்ளுவரின் அறிவியல் சிந்தனை – களப்பால் குமரன்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு – 355 காதல் சிறப்புரைத்தல் அதிகாரத்தின் (113) முதல் குறட்பா, அறிவியல் ஆய்வாளர்களின் ஆய்வு முடிவை ஒத்துள்ளது என்பது வியப்புக்குரிய அறிவியல் உண்மையாகும். 1. பாலொடு தேன்கலந்து அற்றே பணிமொழி வால்எயிறு ஊறிய நீர். இம்மென் மொழியாளின் வெண்பல்லில் ஊறிய நீர் ; பாலுந் தேனுங்கலந்த கலவை போலும் . – பாவாணர் The dew on her white teeth, whose voice is soft and low, Is as…