செஞ்சீனா சென்றுவந்தேன் 6 – பொறி.க.அருணபாரதி
(ஆடி 4, 2045 / சூலை 20, 2014 இதழின் தொடர்ச்சி) 6.சீன ‘வளர்ச்சி’யின் உண்மை நிலை என்ன? சீனாவிற்குள் நுழைந்தவுடன் என்னிடம் எனது அலுவலகப் பணியாளர்கள் கடவுச்சீட்டைக் கேட்டார்கள். அதை அருகிலுள்ள காவல் நிலையத்தில் அளித்து, தற்காலிக குடியிருப்பு அனுமதிச் சீட்டு பெற வேண்டும் என்றார்கள். அதற்கென உள்ள விண்ணப்பப் படிவத்தில், சீன மொழியில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு சீன மொழியிலேயே என்னிடம் கேட்டு விடை எழுதினர். தங்குமிடம், எவ்வளவு நாள் வரை தங்குவோம் முதலான தகவல்கள் அதில் கேட்கப்பட்டிருந்தன….