மலையகத் தொப்புள் கொடி உறவுகளுக்குக் கரம் கொடுத்த கோயம்புத்தூர் சுழற்கழகம்
மலையகத் தொப்புள் கொடி உறவுகளுக்குக் கரம் கொடுத்த கோயம்புத்தூர் சுழற்கழகம். நுவரெலியா சுழற் கழகம் இந்தியாவின் கோயம்புத்தூர் சுழற்கழகத்துடன் இணைந்து இயற்கைப் பேரழிவால் அல்லது நேர்ச்சிகளால்(விபத்துக்களால்) ஒரு பகுதி கைதுண்டிக்கப்பட்டவர்களுக்குச் செயற்கைக் கைகளை வழங்கியது. இதன்போது ஆறு செயற்கைக் கைகளைக் கோயம்புத்தூர் சுழற்கழகத்தின் செயலாளர் செயகாந்தன், நுவரெலியா சுழற்கழகத் தலைவர் உசித பண்டாரவிடம் கையளித்தார். பயனாளிகளுக்குக் கைகள் வழங்கப்படுவதையும் நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம். இந் நிகழ்வில் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் வின்சண்டு அசோகனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.