தருமபுரம் சுவாமிநாதன் நூற்றாண்டு விழா

இசைப் பேரறிஞர் திருமுறைக் கலாநிதி அரசவைக் கலைஞர் தருமபுரம் ப.சுவாமிநாதன் அவர்களின் நூற்றாண்டு விழா புரட்டாசி 20-22, வெள்ளி, சனி, ஞாயிறு, 2053 / 07, 08,09.10.2022 நல்வாழ்வு திருமண மண்டபம், இராயப்பேட்டை, சென்னை 14

முத்திரை வெளியீடும் நூற்றாண்டு விழாவும்

முத்திரை வெளியீடும் நூற்றாண்டு விழாவும் யாழ்ப்பாணம் மாவட்டம் புலோலி புற்றலை மகா வித்தியாலயத்தின் (1916-2016) நூற்றூண்டு விழா வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார். இதன் போது முத்திரை வெளியீடும், நூல் வெளியீடும், சிறப்பிப்பும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

புதுச்செருசியில் தமிழ்விழா 2016

ஆனி 17 – ஆனி 20, 2047 / சூலை 01 –  சூலை 04, 2016 பாவேந்தர் பாரதிதாசன் 125 ஆவது பிறந்தநாள் விழா தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா பேரவைத்தமிழ்விழா 2016 இயல், இசை, நாடகக் கலை நிகழ்ச்சிகள் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நியூசெர்சி தமிழ்ச்சங்கம்    

வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டு விழா, பன்னாட்டுக் கருத்தரங்கம்

  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் வ.சுப.மாணிக்கனார் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுத் தமிழியற்புலத் தமிழியல்துறையின் சார்பாக  எதிர்வரும் ஆகத்து – (2016) திங்கள் வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டு விழாவும்,  “வ.சுப.மாணிக்கனாரின் பன்முக ஆளுமைத் திறன்” என்னும் பொருண்மையில் பல்கலை வளாகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கமும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.   எனவே, மதிப்பிற்குரிய மேனாள்துணைவேந்தர் அவர்களின் மீது நீங்காப் பற்றறுள்ள தமிழறிஞர்கள், பேராசிரியப் பெருமக்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வளர்கள் துணைவேந்தர் அவர்களின் வாழ்வும் பணியும், அவருடைய படைப்புகள் தொடர்பாகவும் இன்ன பிற பொருண்மைகளில் ஆய்வுக் கட்டுரைகள் அமையலாம். ஆய்வுக் கட்டுரைகள் எந்தவிதப் பதிவுக் கட்டணமும்…

குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பண்ணாராய்ச்சி வித்தகரின் நூற்றாண்டு விழா தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா ஆடி 27, 2045 / 12.08.2014 இல் சிறப்பாகநடைபெற்றது. தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் முனைவர் ம. திருமலை தலைமையில் விழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு இசை – கவின்கலைப் பல்கலைக்கழகத்தின்துணைவேந்தர் முனைவர் ஈ.காயத்ரி சிறப்பு விருந்தினராகக்கலந்துகொண்டு ‘தமிழிசை வளர்ச்சியில் குடந்தை ப.சுந்தரேசனாரின் பங்கு’ என்னும்நூலை வெளியிட்டார். மேலும் முனைவர் இ.அங்கயற்கண்ணி அவர்கள் பாடிய‘ஆறுபடைவீடு : திருப்புகழ்ப் பாடல்கள்’ என்னும் ஆறுகுறுவட்டுகள் அடங்கியஒலிவட்டுகளையும் வெளியிட்டார்….