சனாதனம் – பொய்யும் மெய்யும்: முன்னுரை- இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் முன்னுரை சனாதனம் தமிழர்க்கு மட்டுமல்ல, மனித உலகிற்கே எதிரானது. ஆனால் திட்டமிட்டே சனாதனம் குறித்து உயர்வாகப் பரப்புவதால் மக்கள் உண்மையைப் புரிந்து கொள்ளாமல் “அதுபாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டுமே! நமக்கு என்ன?” என்று எண்ணுகிறார்கள். சனாதனத்தால் மிகுதியாக எப்பிரிவினர் தீங்கிற்கு ஆளாகிறார்களோ அப்பிரிவினரையே அதற்கு ஆதரவாகப் பேச வைப்பதுதான் சனாதனவாதிகளின் வெற்றியாகிறது. சான்றுக்கு ஒன்று பார்க்கலாம். நேரு, பெண்களுக்குச் சொத்துரிமையில் பங்கு உண்டு எனச் சட்டம் கொண்டுவர சட்ட வரைவைக் கொண்டு வரும் பொழுது காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி…