நூல்கள் வாங்குவதைக் காலமுறைப்படி ஒழுங்குபடுத்த வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
நூல்கள் வாங்குவதைக் காலமுறைப்படி ஒழுங்குபடுத்த வேண்டும்! தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.(திருவள்ளுவர், திருக்குறள் 396) நமது அறிவுக்கண்களைத் திறக்க உதவுவன புத்தகங்களே! அத்தகைய புத்தகங்களை நல்கும் நூலகங்களே நமக்கு வழிகாட்டிகள். ஒவ்வொருவர் வீட்டிலும் நூலகம் இருக்க வேண்டும் என்பர் அறிஞர்கள். அவ்வாறாயின் ஒவ்வோர் ஊரிலும் நூலகம் இருக்க வேண்டுமல்லவா? தமிழ்நாட்டில் 4028 பொது நூலகங்கள்தாம் உள்ளன. இவைதவிர, கன்னிமாரா பொதுநூலகம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் என நூலகங்கள் உள்ளன. இருக்கின்ற நூலகங்களே வளர்ச்சிநோக்கில் …